Sunday, July 29, 2012

முன்னாள் அமைச்சர் அமீர் அலி கஞ்சிக்கும் வழியின்றி ...



முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவாகளின் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக 30 நோன்புக்கு 50 இப்தார்கள் நிகழ்வு திட்டத்தின் கீழ் கல்குடா முஸ்லிம் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிலும் இப்தார் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இன்று (29.07.2012) மாஞ்சோலை குளத்தடியில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுக்கு மாஞ்சோலை முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சியை ஒரு சொட்டும் வைக்காமல் கிடாரத்துடன் முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் ஆட்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் பள்ளிவாயலுக்கு நோன்பு திறப்பதற்காக வந்த நோன்பாளிகள் நேன்பு திறப்பதற்கு எதுவித ஏற்பாடும் இல்லாததினால் பள்ளிக்கு முன்பாகவுள்ள கோட்டலில் நோன்பு திறந்துவிட்டு சென்றுள்ளனர். அத்துடன் மஃரிப் தொழுகைக்கு பின்னர் பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் அமைச்சர் அமீர் அலி கஞ்சிக்கும் வழியின்றி பள்ளிவாயல் நோன்பு கஞ்சியிலும் கை வைத்துவிட்டார், இவர் இப்தார் செய்வதென்றால் சொந்தப் பணத்தில் கஞ்சி காய்ச்சி கொடுப்பதுதானே இப்படி ஊரார் கோழியை அறுத்து உம்மாவின் பெயரில் கத்தம் ஓதவேண்டுமா? என்றும் இதற்கு முன்னரும் இவர் இப்தார் நிகழ்வுகளை செய்தாரா? இது எல்லாம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவர் நடாத்தும் நாடகம் என்றும் அங்கிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


இதன் பின்னர் நல்லிரவு 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்கள் மாஞ்சோலை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் அவர்களின் வீட்டுக்கு சென்று நடந்தது நடந்துவிட்டது இனிமேல் இப்படி எனது ஆட்கள் கஞ்சியை எடுத்துக்கொண்டு போகமாட்டார்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி மண்ணிப்புக்கேட்டுள்ளார்.

நோன்பில்  மிக  விருப்பமானது ஹலாலான உணவில் நோன்பு நோற்று ஹலாலான  உணவில் நோன்பு திறக்க வேண்டும். இன்று  புதிய நோயாக அரசியலில் நோன்பை களந்து  முன்னாள்  அமைச்சர்  அமீர் அலி நோன்பின்  பலன்களை வீனாக்குகின்றார் உண்ண உணவின்றி நோன்பு  பிடிக்க  கஷ்ட்டப்படும்  எத்தனையோ   ஏழைகள்  எமது  சமூகத்தில்  இருக்க  இங்கு இப்தாருக்கு  செலவு செய்கின்றர் இந்த  அமீர்  அலி  நோன்பு  திறக்க பயண்படுத்துவது எவ்வாறு  உழைத்த  பணம் மக்களை  சுரண்டி ஹராமானா  வழியில் சேர்க்கப்பட்ட  பணமா?? 


சற்று  சிந்தியுங்கள்  மக்களே  உங்களது  வாக்குரிமையை  நோன்பு திறப்புக்கு  விலை  பேசும் இவரிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்
இச் செய்தியானது கல்குடா டுடேக்கு E-Mail மூலமாக கிடைக்கப்பெற்றது.