Saturday, April 30, 2011

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயமும், மாலை நேர வகுப்புகளும்

 அஸ்ஸலாமு அலைக்கும்.

 இப்பிரதேசத்தின் கல்விச் சூழல் தொடர்பாக உங்களுக்கு இருப்பதைப் போலவே எனக்கும் அக்கறை இருப்பதால் இதை எழுதுகிறேன்.
உங்களது இணையத் தளத்தில் இதைப் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன்மட்/ ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடக்கும் சில செயற்பாடுகள் இப்பிரதேச கல்வி வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என கருதக் கூடிய வாறு அமைந்திருக்கின்றன. சமீபத்தில் என்னது சகோதரர் மகளின் க.பொ.த. உயர் தர அனுமதிக்காகச் சென்ற போது பாடசாலையில் படிக்கும் ஒவ்வொரு மாணவியும் வேறு எந்த தனியார் கல்வி
நிலையத்திற்கும் பாடங்களைப் படிக்கச் செல்லக் கூடாது எனவும் பாடசாலையிலேயே மாலை நேர வகுப்புகள் அனைத்தும் கட்டணம் வசூலிக்கப் பட்டு நடத்தப் படுமெனவும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று படிப்பது மாணவர்களின் தெரிவையும் விருப்பத்தையும் பொறுத்த ஒரு விசயமல்லவா எனக் கேட்கப் பட்டபோது, அப்படிச் சென்றால் பரவாயில்லை ஆனால் மாலை நேர வகுப்புகளுக்கென வசூலிக்கப் படும் பணத்தை பாடசாலைக்குச் செலுத்த வேண்டுமெனக் கூறப் பட்டுள்ளது. அதாவது வகுப்புக்கு வரா விட்டாலும் பரவாயில்லை காசைத் தர வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தரம் 9 , 10 , 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடசாலையிலேயே மாலை நேர வகுப்புகள் நடத்தப் போகிறோம் எனக் கூறி தனியார் கல்வி நிலையங்களில் கற்ற மாணவிகளை எல்லாம் அவற்றிலிருந்து நிறுத்தி விட்டு பாடங்களை தொடக்கி சில மாதங்களிலேயே அவை கை விடப் பட்டதால் தனியார் கல்வி நிலையங்களில் இருந்து விலகிய அம்மாணவர்கள் அரசனை நம்பி புருசனைக் கை விட்டதைப் போல பாடசாலையிலும் இல்லாமல் தனியார் கல்வி நிலையங்களிலும் இல்லாமல் நிர்க்கதிக்குள்ளான கதையை ஒரு பெற்றோர் கூறினார். உயர் தரம் கற்பிக்கும் அரசியல் பின்புலமுள்ள ஒரு ஆசிரியர் தான் கற்பிக்கும் பாடத்தை மாணவர்கள் வேறு யாரிடமும் போய்க் கற்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பதாக அறிய முடிகிறது இந்த ஆசிரியர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் தான் ஒவ்வொரு முறையும் மாணவர்களை வேறு இடங்களில் சென்று கற்கக் கூடாது என நிர்பந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலதிக வகுப்பு எனக் கூறிக்கொண்டு இவர்கள் மாலை நேர வகுப்பை நடத்தியே சிலபஸ் முடிக்கிறார்கள், அதுவும் கட்டணத்தை அறவிட்டுக் கொண்டு. இதனால் மாணவர்களது தேடிக் கற்கும் சுதந்திரம் பறிக்கப் படுவதோடு எதிர்த்துப் பேசினால் பாடசாலையை விட்டு மாணவர்களை விலக்கி விடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த நிலைமைக்கு பாடசாலை நிர்வாகமும் துணை போகிறது. கல்வி எப்படி வளரும்? கல்வித் திணைக்கள அதிகாரிகள், நலன் விரும்பிகள் இந்த விடயத்தில் கவனம் எடுப்பார்களா?

நன்றி!
இப்படிக்கு
ஊரான்.

4 comments:

Abd.Majeed, Qatar said...

மொத்தத்தில் மாலைநேர வகுப்புகலே தேவையற்றது. அரசு பல பில்லியன் ருபாக்களை கல்விக்காக ஆண்டு தோறும் எமது வரிப்பாணத்தில் இருந்து செலவிடுகிறது. அதன் பின்னும் எங்களுக்கு மாலை நேர வகுப்புக்கள் அவசியம் என்று ஒருவர் (ஆசிரியர்) கூறினால். இந்த கோடிக்கணக்காண அரச செலவுகளுக்கு என்ன அர்த்தம்?

உண்மைகள் எமது ஆசிரியர்கள் தமது கடமைகளை சரியாக பாடசாலை நேரங்களில் செய்வதில்லை. நான் வர்த்தக பிரிவில் அன்-நூரில் கற்கின்ற போது எனது கலைத்துறை அன்பர்கள் குறைப்படுவது தமது தமிழ் வாத்தியார் அய்யாவைத்தான். அவர் வகுப்பில் முழுமையாக கற்பிப்பதில்லை. ஒரு பாடத்தின் சிரிய பகுதியை கற்பிப்பார். மிகுதி பிரைவேட் டியூஷன் சென்டரில். அல்லது பாட திட்டத்தின் ஒரு அலகை வகுப்பிலும் மறு அலகை (நல்ல முறையில்) டியூஷன் சென்டரிலும் தொடர்வர். இதனால் மீராவோடை சேர்ந்த நண்பர் ஒருவர் தனது குடும்பத்தை வறுமை நிலை காரணமாக பாடசாலையை விட்டே விலகிச்செண்டர். அவரால் டியூஷன் பணம் கொடுக்க முடியாது. உண்மையல் அவர் படிக்க வேண்டும் என்பதற்காக இரண்டா முறையாகவும் O / L எழுதி A / L படிக்க அன்நூருக்கு வந்தவர். அப்பொழுது மீராவோடையில் உயர்தரம் இல்லை.

Mujeeb Ahamed said...

டியர் ஊரான்,

நீங்க சொல்றது சரி, அதே போல தனியார் வகுப்புக்களில் நடக்கும் ஆண் பெண் சிலுமிசங்கள் இங்கே நடக்காது, அதே போன்று காதல் வயப்பட்டோம் என்று சின்ன வயதில் நம் பிள்ளைகளின் மனம் அலைபாய்வது அனைவருக்கும் தெரியும். அதை பெற்றோர்கள் ஒத்துக்க் கொள்ளாததும் , தம் பிள்ளைகளை தண்டிப்பதும் கண்டிப்பதும் வழக்கம், இப்படி குறிப்பிட்ட பாடசாலைகளிலேயே மாணவிகளுக்கு வகுப்புக்கள் ஆரம்பிப்பது நல்ல விடயந்தான். இந்த மாதிரி விடயங்கள் குறையும்,,

அதே வேளை அதிக பணம் வசூலிப்பது நல்ல விடயம் இல்லை. பொதவான ஒரு விடயம் பாடசாலைகளில் விசேட வகுப்புக்கள் ஆரம்பிக்கும் அதிக பணம் செலவாகின்றது வழமை.

நம் சமூக நலன்மிக்க சகோதரர்கள் சிலர் நம் சமூக பெண்களின் நிலை கருதி மாலில் நேர வகுப்புக்கள் ஆறு மணிக்கு பிறகு தொடர கூடாது என ஊரில் அனைவரையும் எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கதொரு விடயம்,.

சின்னொரு விடயம், கருது சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு, பயப்படாமல் உங்கள் பெயர்களையே நீங்கல் உங்கள் பதிவிற்கு கீழே போட முடியும், கருத்து சுதந்திரம் என்றாலும் அதுக்கும் வரையறை, வரம்புகள் உண்டு எண்பது முக்கியமான விடயம்.

himujee said...

டியர் ஊரான் மற்றும் அனைவருக்கும்,

Anonymous said...

i also heard,thats really.thanks for uploading this matter.